குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நடத்த சி.பி.ஐ.க்கு தமிழக அரசு அனுமதி
குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்த நிலையில், 2016 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு குடோனில் ஏராளமான ஆவணங்களும், குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுதப்பட்ட டைரியும் கிடைத்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், தமிழக அரசு அதற்கான அனுமதியை தற்போது வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளான செந்தில்முருகன் மற்றும் சிவக்குமாரிடம் சட்டவிரோத பரிவர்த்தணை தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்க உள்ளனர்.