செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2020-07-20 12:18 GMT
செங்கல்பட்டு,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையுடன் பாதிப்புகள் உள்ளன.  இதேபோன்று சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.

இதேபோன்று தென்மாவட்டங்களான மதுரை, தேனி, நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னையை அடுத்த காஞ்சீபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,029 ஆக இன்று உயர்ந்துள்ளது.  இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 360 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10,008 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது.  194 பேர் உயிரிழந்துள்ளனர். 2,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்