கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு துவக்கம்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணிக்கு துவங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்மையில் உயர்கல்வித்துறை அறிவித்தது.
இதையடுத்து அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை 6 மணி முதல் துவங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் 31 ஆம் தேதிவரை http://tngasa.in மற்றும் http://tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.