பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-17 09:26 GMT
ஈரோடு,

முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . சிலை அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது.

கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது . ஈரோட்டில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ' கட்டும்பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளது. மின்கட்டண கணக்கீ்ட்டில் எந்த குளறுபடியும் இல்லை” என்றார்.

மேலும் செய்திகள்