அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவடையும் - முதல்வர் பழனிசாமி
அத்திக்கடவு- அவினாசி திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளிடம், ஆலோசனை நடத்தினார்.
அப்போது குடிமராமத்து திட்டத்தால் அடைந்த பயன்கள் குறித்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அத்திக்கடவு- அவினாசி திட்டம் முழுமையாக நிறைவடையும் என்ற தகவலையும் வெளியிட்டார்.