மயிலாடுதுறை சிறப்பு அதிகாரி நியமனம் - மாவட்ட எஸ்.பி.யாக ஸ்ரீநாதா நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல்வேலியைப் பிரித்து தென்காசி, விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணை கடந்த ஏப்.8-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய மாவட்டத்தின் எஸ்.பியாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். நாகையிலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.