சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் மதுரை கோர்ட்டில் தாக்கல்

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.;

Update: 2020-07-10 21:52 GMT
மதுரை, 

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இறந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் டெல்லியில் இருந்து நேற்று சி.பி.ஐ.அதிகாரிகள் குழு விமானம் மூலம் மதுரை வந்தனர். அங்கிருந்து அவர்கள் தூத்துக்குடிக்கு சென்று, தங்களின் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்தன. அந்த ஆவணங்கள் நேற்று மதுரை மாவட்ட தலைமை ஜூடிசியல் கோர்ட்டுக்கு கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளதால் வழக்கு ஆவணங்கள் மதுரை மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்