சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை
சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வததைத்து வந்தது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், கோவிலம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, அதன் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.