கொரோனா பாதித்த அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியே நலம் விசாரித்துள்ளார்.
சென்னை,
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார்.
சிகிச்சை முடிந்து விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதேபோன்று, பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.