புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-08 07:25 GMT
புதுவை,

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுவை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுவையில் ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகை 48 மணி நேரத்திற்கு திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அலுவலக பணி நடைபெறும் இடங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்