நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி வருகின்றன.
நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,114 ஆக இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,205 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாநகரப் பகுதியில் மட்டும் 56 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 416 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 180க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று ஒரே நாளில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.