சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது சிக்கி தவித்த 6 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு
சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது சிக்கி தவித்த 6 இலங்கை மீனவர்களை கடலோர பாதுகாப்பு படை பத்திரமாக மீட்டனர்.
சென்னை,
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு ஒரு தனியார் சரக்கு கப்பல் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கிழக்கே 176 கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் ஒரு படகு கவிழ்ந்து, அதன் மீது 6 மீனவர்கள் அமர்ந்து பரிதவித்தனர். இதனை பார்த்த தனியார் கப்பலில் இருந்த ஊழியர்கள், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து கடல்சார் மீட்பு சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பரிமாறப்பட்டது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை ரோந்து கப்பல் விரைந்து சென்று நடுக்கடலில் பரிதவித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது.
விசாரணையில் மீட்கப்பட்ட 6 மீனவர்களும் இலங்கை திரிக்கோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இலங்கை கடல் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலையால் படகு திசைமாறி இழுத்துவரப்பட்டு கவிழ்ந்து உள்ளது. அவர்கள் 4 நாட்களாக சிக்கி தவித்ததும் தெரிய வந்தது. இலங்கை மீனவர்கள் பத்திரமாக அவர்கள் நாட் டுக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் இந்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.