அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை விலையில்லா உணவு பொருட்கள் வழங்க வேண்டும் - இரா.முத்தரசன் வலியுறுத்தல்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை விலையில்லா உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மக்களுக்கு விலையில்லா உணவு பொருட்கள் வழங்குவது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-
“கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 24 முதல் மத்திய அரசால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. இந்தியாவில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்துப் பிரிவுகளின் இயக்கங்களும் தடைப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடியான காலத்தைச் சமாளிக்க குடும்ப அட்டை பெற்றிருப்போர் அனைவருக்கும் வரும் நவம்பர் மாதம் வரை பொது விநியோகத்துறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாடு முதல்வர் இந்த ஜூலை மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டை இல்லாதோர் குறித்தும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்போர் குறித்தும் கருத்தில் கொள்ளவில்லை.
முன்னர் ‘மூன்று நாளில் கொரோனா பிரச்சினைக்குத் தீர்வு’ வரும் என அறிவித்தது போல், இந்த மாத இறுதியில் கொரோனா நெருக்கடி முடிந்துவிடும் என நம்புகிறாரா? மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி கொரோனா நோய்த்தொற்று பல மாதங்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலவரத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும்” என்று இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.