மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய போலீசார்

மின்சாரம் தாக்கி இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி போலீசார் மரியாதை செலுத்தினர்.;

Update: 2020-07-04 21:56 GMT
கோவை,

கோவை திருச்சி ரோட்டில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று ஒரு மயில் பறந்து வந்தது. அந்த மயில் அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார்மரில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அமர்ந்தது. அப்போது திடீரென்று அந்த மயில் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த மயில் கருகி இறந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அங்கு தொங்கிய மயிலின் உடல் மீட்கப்பட்டது. இறந்தது பெண் மயில் ஆகும். மயில் தேசிய பறவை என்பதால் இறந்த மயிலின் உடல் மீது போலீசார் தேசிய கொடியை போர்த்தி அதற்கு உரிய மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மயில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்