தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி
தமிழக பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதில் வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழக பா.ஜ.க. புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில துணை தலைவர்களாக எம்.சக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், திருவாரூர் எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, பேராசிரியர் கனகசபாபதி மற்றும் புரட்சிக்கவிதாசன் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர்களாக கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், ஆர்.சீனிவாசன், கரு நாகராஜன் ஆகிய 4 பேரும், மாநில செயலாளர்களாக கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், முன்னாள் மேயர் கார்த்தியாயினி உள்பட 9 பேரும், மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், இணை பொருளாளராக சிவ சுப்பிரமணியன், மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில இளைஞர் அணி தலைவராக வினோஜ் பி.செல்வம், மகளிர் அணி தலைவராக எஸ்.மீனாட்சி, எஸ்.சி.அணி தலைவராக பொன்.வி.பாலகணபதி, எஸ்.டி.அணி தலைவராக எஸ்.சிவப்பிரகாசம், விவசாய அணி தலைவராக ஜி.கே.நாகராஜ், ஓ.பி.சி. அணி தலைவராக ஜெ.லோகநாதன், சிறுபான்மையினர் அணி தலைவராக ஏ.ஆஷிம் பாஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் பிரிவு தலைவராக எஸ்.சதீஸ்குமார், கலைகலாசார பிரிவு தலைவராக நடிகை காயத்ரி ரகுராம், ஊடக தொடர்பு பிரிவு தலைவர்களாக ஏ.என்.எஸ்.பிரசாத், எம்.கே.ரவிச்சந்திரன், எஸ்.என்.பாலாஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பல்வேறு அணிகளுக்கும், பிரிவுகளுக்கும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக டாக்டர் சிவகாமி பரமசிவம், தடா பெரியசாமி, ராமசுப்பு என்ற பாலாஜி (தினமலர் ஆசிரியர்) , முன்னாள் எம்.பி.க்கள் சி.நரசிம்மன், ஆர்.ராமதாஸ், கே.எஸ்.சவுந்தரம், எஸ்.கே.கார்வேந்தன், சசிகலா புஷ்பா உள்பட 39 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி.குப்புராமு, மோகன்ராஜூலு, எம்.என்.ராஜா, ஏ.என்.எஸ்.பிரசாத், வானதி சீனிவாசன் உள்பட 60 பேர் மாவட்ட பார்வையாளராகவும், மாதவி ம.பொ.சி., நடிகைகள் கவுதமி, நமீதா, குட்டி பத்மினி, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. பாலச்சந்தர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சிதம்பரசாமி உள்பட 78 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுப நாகராஜன், டி.குப்புராமு, எம்.எஸ்.ராமலிங்கம், எம்.சுப்பிரமணியன், சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன், திருப்பதி நாராயணன், கே.கனிமொழி ஆகியோர் மாநில செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டத்துக்கு ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்டத்துக்கு எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு மாவட்டத்துக்கு என்.வசந்தராஜன், நீலகிரி மாவட்டத்துக்கு எச்.மோகன்ராஜ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த வி.பி.துரைசாமி, தனது கட்சியை பா.ஜ.க.வோடு இணைத்த வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட பின்னர், மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் தற்போது மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் செயல்பாட்டால் கவரப்பட்டு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொள்கிறார்கள். அந்தவகையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. கிளைகளை பலப்படுத்தும் பணிகளை தொடங்கியிருக்கிறது. 234 தொகுதிகளிலும் ஆயிரத்து 170 காணொலிக்காட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வை தமிழகத்தில் பூத் அளவில் வலிமைப்படுத்தும் பணி நடக்கிறது. பொதுமக்களுக்கு முககவசம், மோடி கிட் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
சாத்தான்குளம் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கை மேலும் விரைவுபடுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும்.
எல்லா விஷயங்களிலும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் செய்வதுதான் வேலை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதமாக செயல்பட்டு, எந்த பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு நாகராஜன், ஊடக தொடர்பு பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக அறம் மக்கள் நலச்சங்கத்தை நடத்தி வரும் அழகர்சாமி என்ற ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் (கருத்தியல் பரப்பு) கிரண்குமார் ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களை எல்.முருகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.