சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவிவித்துள்ளது.

Update: 2020-07-02 07:09 GMT
மதுரை,

சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கை  மதுரை ஐகோர்ட் கிளை இன்று  காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை நண்பகல் வரை நீடித்தது.

வழக்கு விசாரணையின் போது,   சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சாட்சி அளித்த காவலர் ரேவதியிடம் தொலைபேசி வாயிலாக நீதிபதிகள் பேசினர்.  காவலர் ரேவதியிடம் நலம் விசாரித்ததோடு, பாதுகாப்பு குறித்தும் கேட்டனர்.  தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடியின் விசாரணை நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறிய மதுரை உயர் நீதிமன்ற கிளை  வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மேலும் செய்திகள்