10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி

10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2020-06-19 06:36 GMT
சென்னை

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி
அடைந்து உள்ளனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்களை தந்தி டிவிக்குதெரிவித்தூள்ளனர்.

சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறி உள்ளனர். 

மேலும் செய்திகள்