ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்புகளை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த அரசாணை திரும்ப பெறப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-18 16:25 GMT
சென்னை,

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தமிழ்நாட்டிலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் தமிழகம் முழுவதும் 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பு படி ஆங்கிலத்தில் அமையுமாறு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசின் அந்த அரசாணை திரும்ப பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்