செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2020-06-18 07:45 GMT
சென்னை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்து உள்ளது. 1597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1640 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று உயிரிழந்த 3 பேரையும் சேர்த்து அங்கு கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 33ஆக உயர்ந்துள்ளது. 

சென்னைக்கு வந்து சென்ற மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 80 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுடன் குடும்பத்தினர், உறவினர் என சுமார் 25 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்