புதிதாக 2,174 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது 21 வயது வாலிபர் உள்பட 48 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 48 பேர் பலியாகினர்.
சென்னை,
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 1,367 ஆண்கள், 805 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பேரும் உள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
21 வயது வாலிபர் பலி
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேர், தனியார் மருத்துவமனையில் 10 பேர் என மொத்தம் 48 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 21 வயது வாலிபர், 90 வயது முதியவர் உள்பட 40 பேரும், காஞ்சீபுரம், செங்கல்பட்டை சேர்ந்த தலா இருவரும், திருவள்ளூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரையை சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 624 பேர் குணம் பெற்று உள்ளனர். இதையடுத்து 21 ஆயிரத்து 990 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 1,276 பேருக்கு...
தமிழத்தில் நேற்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சென்னையில் 1,276 பேரும், செங்கல்பட்டில் 162 பேரும், திருவள்ளூரில் 90 பேரும், கடலூரில் 77 பேரும், ராணிப்பேட்டையில் 70 பேரும், காஞ்சீபுரத்தில் 61 பேரும், ராமநாதபுரத்தில் 51 பேரும், தூத்துக்குடியில் 50 பேரும், திருவண்ணாமலையில் 49 பேரும், மதுரையில் 27 பேரும், சேலத்தில் 25 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும், கள்ளக்குறிச்சியில் 16 பேரும், திண்டுக்கல், வேலூர், திருவாரூர், நெல்லையில் தலா 15 பேரும், நாகப்பட்டினத்தில் 13 பேரும், சிவகங்கை, தஞ்சாவூரில் தலா 12 பேரும், தர்மபுரியில் 10 பேரும், கன்னியாகுமரி, புதுக்கோட்டையில் தலா 9 பேரும், திருச்சி, கரூரில் தலா 8 பேரும், நீலகிரி, தென்காசியில் தலா 5 பேரும், தேனி, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், விருதுநகர், நாமக்கல், கோவையில் தலா 2 பேரும், திருப்பத்தூரில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக பலி?
தமிழகத்தில் இதுவரை சென்னையில் 461 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும், திருவள்ளூரில் 31 பேரும், காஞ்சீபுரத்தில் 10 பேரும், விழுப்புரம், மதுரையில் தலா 6 பேரும், திருவண்ணாமலையில் 4 பேரும், வேலூர், திண்டுக்கலில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடியில் தலா இருவரும், விருதுநகர், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் தலா ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 231 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 108 பேரும், ரெயில் மூலம்
வந்த 338 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,619 பேரும், கடல் மார்கமாக வந்த 5 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.