ஐகோர்ட்டில் நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
சென்னை,
கொரோனா வைரசினால் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன. இதற்காக நீதிமன்ற பணியாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு சென்னை ஐகோர்ட்டில் பணிக்கு வந்த துணை பதிவாளர் உள்பட பல ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய அலுவலகம் சில நாட்களுக்கு இழுத்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஆனாலும் வைரஸ் தொற்று பரவல் நிற்கவில்லை.
ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் ஐகோர்ட்டுக்கு வந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கு பதில் தங்களது வீடுகளில் இருந்தபடி வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
வீரர்களுக்கு தொற்று
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்கள், ஐகோர்ட்டுக்கு வரும் பணியாளர்களை சோதனை செய்து உள்ளே அனுப்பும் பணியில் ஈடுபட்டவர்கள். இவர்களில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்களும் ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, ஐகோர்ட்டில் பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது.