தமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை - டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல்

தமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-13 09:19 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்று தமிழகத்தில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதில் 1,479 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் அரசு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய் பரவும் அபாயம் இருப்பதால் தற்போது தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்