கொரோனா: அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் - கமல்ஹாசன் டுவீட்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,229-ல் இருந்து 34,914 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இளைஞர்களே! நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம்.#நாமேதீர்வுஇணைந்து மீட்போம் சென்னையை... அழைப்பு எண்: 6369811111 என பதிவிட்டுள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) June 9, 2020
இளைஞர்களே!
நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம்.#நாமேதீர்வு#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111 pic.twitter.com/rfiChyZ39X