தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை?

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-06-07 10:47 GMT
சென்னை,

நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி தலைமை செயலகத்தில் சமய தலைவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். சமய வழிபாட்டு தலங்களை  திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி பெற வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க இயலாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமய வழிபாட்டுத் தலங்கள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்