10ம் வகுப்பு பொது தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

10ம் வகுப்பு பொது தேர்வு ஹால்டிக்கெட் பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Update: 2020-06-07 04:31 GMT
சென்னை,

தமிழகத்தில் ஜூன் 1ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கூறினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள், ஹால்டிக்கெட் பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எளிதில் அடையாம் கண்டு கொள்வதற்காக பேருந்துகளின் முகப்பு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். இந்த பேருந்துகள் நாளை முதல் 13ந்தேதி வரை இயக்கப்படும்.  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.  ஆசிரியர்கள் பயண சீட்டு பெற்று பயணிக்கலாம்.  பிற பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்