கொரோனா தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் பிரார்த்தனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னை,
சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரசின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி, கொரோனா வைரசின் முதல் பாதிப்பு தொடங்கியது. இது ஏப்ரல் 1-ந்தேதியன்று 234 பேருக்கு என்ற நிலையை அடைந்தது. இந்த எண்ணிக்கை, மே 1-ந்தேதி 2 ஆயிரத்து 526 என்ற நிலை ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கொரோனா வைரசின் தாக்கம் ஊடுருவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 251 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில், கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும், அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பெண்களும், சிறுமிகளும் வழிபாடு நடத்தினர்.