ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது - தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தொடர்ந்து ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினுடன் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.