சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா தொற்றால் சென்னை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளது. ராயபுரம் உள்பட 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச்சிந்தனையை பயன்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்து 224 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 93 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 29 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 14 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,798 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த எண்ணிக்கை மிக, மிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
‘கொரோனாவை மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்திவிட்டோம் என்றும், பலியானவர் எண்ணிக்கை குறைவு என்றும் தனக்குத் தானே மார்தட்டிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் 5 மண்டலங்கள் முழுமையாக கொரோனா மண்டலங்களாக மாறிவிட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? அதுவும் சென்னையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரம், ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப்போல, லட்சத்தை தாண்டி செல்லுமோ? என்றே நினைக்கத்தோன்றுகிறது.
உரிய சோதனைகள் உடனடியாக செய்யப்படுவது இல்லை. சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதில்லை. மரணங்கள் அனைத்தும் 5 நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகின்றன. கொரோனா மரணங்களாக இல்லாமல் வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன. இப்படி பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகிறார்கள். இவை எதற்கும் முதல்-அமைச்சரோ, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ உரிய பதிலை சொல்வது இல்லை. தினமும் பாசிட்டிவ் ஆனோர் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததாக சென்று விடுகிறார்கள்.
இதனிடையே தமிழ்நாடு அரசு டாக்டர்கள், நர்சுகள் சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நாளை (இன்று) ஒருநாள் அடையாளப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அந்த கூட்டமைப்பினரை அழைத்து உடனடியாக அரசு பேசவேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கவேண்டும்.
கடந்த 4 நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதாகவும், 144 போட்டுள்ளதாகவும் சொல்லப்படும் சென்னையில் வாகன போக்குவரத்து என்பது, நெரிசல் மிகுந்ததாக உள்ளது என்றால் இதுதான் ஊரடங்கும், 144 தடையும் அமலில் இருக்கும் லட்சணமா? கோயம்பேடு காய்கறி அங்காடியை திறந்துவிட்டும், ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளை திறந்துவிட்டும், கொரோனா பரவலுக்கு மறைமுக காரணமாக இருந்த தமிழக அரசு, இப்போது சென்னையை திறந்துவிட்டு, அடுத்த கொரோனா பாய்ச்சலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய 5 மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்து காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, ‘கொரோனா இல்லாத சென்னை’யாக காட்டுவதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. நோய் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடு, வீடாக செய்யவேண்டும். இந்த பகுதியை சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தவேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை அரசே வழங்கவேண்டும். அந்த பகுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்கவேண்டும். சென்னையின் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச்சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.