தமிழக பா.ஜனதாவின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
தமிழக பா.ஜனதாவின் முன்னாள் தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சென்னை
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இவர் தமிழக பாஜக தலைவராக 2 முறையும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
இந்நிலையில் 92 வயதான லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.என்.லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Anguished by the demise of Shri KN Lakshmanan Ji. He was at the forefront of serving the people of Tamil Nadu and expanding the BJP organisation there. His role in the anti-Emergency movement and participation in socio-cultural activities will always be remembered. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020