உலக சுகாதார அமைப்பில் பதவி மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக நீங்கள் பொறுப்பேற்பதற்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.;

Update: 2020-05-23 21:25 GMT
சென்னை,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக நீங்கள் பொறுப்பேற்பதற்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயரிய கவுரவத்தை அடைய நீங்கள் தகுதியானவராக இருக்கிறீர்கள்.

சுகாதார விவகாரங்களில் உலகம் முழுவதும் குழப்பம் நிலவும் அதே வேளையில், கொரோனாவை எதிர்த்து முன்னிலையில் நின்று உலக சுகாதார அமைப்பு போரிடும் இந்த சூழ்நிலையில், உங்களுக்கு சவாலான பணி வந்து சேர்ந்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் நோக்கம், உங்களது இடைவிடாத முயற்சிகள் மூலம் நனவாவதன் மூலம் இனி வரும் நாட்களில் இந்தியாவுக்கு புகழ் சேரும் என்பது உறுதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்