தி.மு.க. எம்.பி.க்கள் மீது மே 29ந்தேதி வரை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது; சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. எம்.பி.க்கள் மீது மே 29ந்தேதி வரை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-05-23 11:41 GMT
சென்னை,

தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி இருந்தது.  அவர்கள் இருவரும், தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.  நீதிபதி நிர்மல்குமார் காணொலி காட்சி மூலம் மனுவை விசாரணை மேற்கொண்டார்.  இந்த விசாரணையில், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது மே 29ந்தேதி வரை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது.  தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  வழக்கை வரும் 29ந்தேதிக்கு ஒத்தி வைத்து அவர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்