தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் - அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-22 13:16 GMT
சென்னை,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. 

அனைத்து மாநிலத்திலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஒவ்வொறு மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் காணொலி காட்சி வாயிலாக அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில்,  மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஷ் பஸ்வான் உடன், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில், ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து அவர் விளக்கம் அளித்தார். மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான 2 ஆயிரத்து 609 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்