‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் 28 லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
மக்களுக்கு தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பல்வேறு நல உதவிகள், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.;
சென்னை,
கொரோனா, மக்களை மிரட்டி வரும் வேளையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பல்வேறு நல உதவிகள், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 19 நாட்களில் 36 நகரங்களில் 73 சமையல் கூடங்கள் மற்றும் 239 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 28.7 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 95 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், தி.மு.க.வும் என்றும் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவோம் என்பதை மற்றோர் கணம் ‘ஒன்றிணைவோம் வா’ முயற்சியின் ஓர் அங்கமான ஏழை, எளியோர்க்கு உணவு செயல்பாட்டின் வாயிலாக தமிழக மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.