மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய தொழிலாளி

ஜெயங்கொண்டம்,
மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் தொழிலாளி மோட்டார் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அன்பு அமுதன் (4), அகிலேஸ்வரன் (1) என 2 மகன்கள் உள்ளனர்.
திருப்பூரில் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செல்வம், தற்போது அரியலூர் மாவட்டம் கண்டியங்கொல்லை கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் நேற்று முன்தினம் வழக்கம்போல் மது குடித்துள்ளார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் மூத்த மகனான அன்பு அமுதனை அழைத்துக் கொண்டு கடாரங்கொண்டான் கிராமத்தில் இறந்த உறவினர் துக்க காரியத்துக்கு சென்றார்.
மீண்டும் துக்க வீட்டிலும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் இரவு 10 மணியளவில் செல்வம் தனது மகன் அன்பு அமுதனை மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லைக்கு புறப்பட்டார். புதுச்சாவடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்த குழந்தை அன்பு அமுதன் வழுக்கி சாலையில் விழுந்தான். தனது மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் செல்வம் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டி சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த குழந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து, யாருடைய குழந்தை என்று தெரிவதற்காக, அந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்தனர். இதனை அறிந்த குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை அன்பு அமுதன் கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
அதன்பிறகு குழந்தையின் தந்தை செல்வத்தை போலீசார் தேடியபோது, குழந்தை விழுந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சாலையோரத்தில் உள்ள வடிகால் அருகே முட்புதரில் மோட்டார் சைக்கிளுடன் செல்வம் சுய நினைவின்றி விழுந்து கிடந்தார். பின்னர் அவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.