முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.367 கோடி வசூல் - சிறுக சிறுக சேமித்த பணத்தை வழங்கிய பொதுமக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.367 கோடி கிடைத்து இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. சிறுக சிறுக சேமித்த பணத்தை வழங்கிய பொதுமக்களுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கு என முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து மே 5-ந் தேதி வரை மொத்தம் ரூ.347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 வரப்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, மே 6-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை உள்ள 9 நாட்களில் ரூ.10 லட்சத்திற்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரம் வருமாறு:-
சக்தி மசாலா பிரைவேட் நிறுவனம் ரூ.5 கோடி. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2 கோடி. மோபிஷ் இந்தியா பவுண்டேசன் ரூ.1 கோடியே 50 லட்சம். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், மணலி ரூ.1 கோடி. பைஜூஸ் ரூ.1 கோடி. ரானே டி.ஆர். டபிள்யூ. ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனம் ரூ.45 லட்சம். ரானே ஹோல்டிங்ஸ் ரூ.25 லட்சம். ரானே என்.எஸ்.கே. ஸ்டீரிங் சிஷ்டம் பிரைவேட் நிறுவனம் ரூ.20 லட்சம். ரானே (மெட்ராஸ்) நிறுவனம் ரூ.5 லட்சம். ரானே பிரேக் லைனிங் நிறுவனம் ரூ.5 லட்சம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ரூ.31 லட்சத்து 15 ஆயிரத்து 804. தமிழ்நாடு பான் புரோக்கர்ஸ் அண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் ரூ.31 லட்சம். மதுரா கோட்ஸ் பிரைவேட் நிறுவனம் ரூ.25 லட்சம். ஆனந்தம் பவுண்டேஷன் ரூ.25 லட்சம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.50 லட்சத்து 67 ஆயிரத்து 908. இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.1 கோடி. மாநில திட்ட இயக்குனரகம் ரூ.93 லட்சத்து 28 ஆயிரத்து 340. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ரூ.76 லட்சத்து 49 ஆயிரத்த 666. கோவை மாவட்ட ஆட்சியரகம் ரூ.10 லட்சம். மெப்கோ சகியங் மெட்ரிகுலேஷன் பள்ளி ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 430.
பி.ஆர்.சுந்தர் மேன்சன் கன்சல்டன்சி பிரைவேட் நிறுவனம் ரூ.25 லட்சம். அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை ரூ.27 லட்சத்து 15 ஆயிரத்து 500. கோயம்புத்தூர் மாநகராட்சி ரூ.13 லட்சத்து 66 ஆயிரத்து 664. அல்ட்ரா மெரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் நிறுவனம் ரூ.10 லட் சம். ஸ்ரீ சரவணா மில்ஸ் பிரைவேட் நிறுவனம் ரூ.10 லட்சம்.
மேற்கண்ட 9 நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ரூ.19 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 903 வரப்பெற்றுள்ளது. 14.-ந் தேதி வரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ஆகும்.
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும், சிறுக சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், முதல்-அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அரசு ஊழியர்களுக்கும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக் கும், முதல்- அமைச்சர் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.