என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-10 08:07 GMT
சென்னை,

அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிறு
அன்னையர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதை இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட70 நாடுகள் பின்பற்றுகின்றன.

சமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பினாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர்.அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. இன்றைய தினம் உலகம் முழுவதும் அன்னையர் தினமாக கொண்டாப்படுகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தாயிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது! என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்