திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை- முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-05-09 12:01 GMT
சென்னை,

தமிழகத்தில்  கொரோனா நோய்த்தொற்று  பரவலின் மையம் என்று சொல்லும் அளவுக்கு கோயம்பேடு காய்கறி சந்தை  மாறியது. 
கோயம்பேட்டில் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவா்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தையை தமிழக அரசு  மூட உத்தரவிட்டது.

கோயம்பேட்டில் காய்கறி சந்தை மூடப்பட்டதையடுத்து, சென்னையை அடுத்த திருமழிசைக்கு காய்கறி சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சந்தையில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு கடைக்கும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று  மாலை 5.15 மணியளவில் நேரில் ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வின் போது வியாபாரிகளுக்காக தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

மேலும் செய்திகள்