கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்- தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-06 14:25 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக  தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 771 ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.   

சென்னையில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2332ஆக உயர்ந்துள்ளது.   அரியலூர் மாவட்டத்தில் 188 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1516 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் 3275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 13,343-பேருக்கு பரிசோதனைகள்  செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்