திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி
திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இதற்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் 1,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போது பச்சை மண்டலமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 279 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.