கோவை-ராஜ்கோட் இடையே சிறப்பு பார்சல் ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கோவை-ராஜ்கோட் இடையே சிறப்பு பார்சல் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல் கொண்டு செல்ல கீழ்க்கண்ட சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
* ராஜ்கோட்-கோவை (வண்டி எண்: 00926) இடையே சிறப்பு பார்சல் ரெயில் 7, 11, 15-ந்தேதிகளில் மாலை 5.30 மணிக்கு ராஜ்கோட் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கோவை-ராஜ்கோட்(00927) இடையே சிறப்பு பார்சல் ரெயில் இன்று (புதன் கிழமை), 10, 14, 18-ந் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* மும்பை சி.எஸ்.டி.- சென்னை எழும்பூர்(வண்டி எண்: 00115) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு பார்சல் ரெயில் ஏற்கனவே மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு மேலும் மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், இந்த சிறப்பு பார்சல் ரெயில் சேவை மே 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
* அதேபோல் எழும்பூர்- மும்பை சி.எஸ்.டி(00116) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு பார்சல் ரெயில் மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த ரெயில்கள் மூலம் பார்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ள, பொது மக்கள் 9025342449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.