ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் : கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள், கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-05-05 07:32 GMT
சென்னை,

சென்னை,  தாம்பரம் அடுத்த, பெருங்களத்தூர் மென்பொருள் பூங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கட்டுமான பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்  பீர்க்கன்காரணை அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டுமான நிறுவனத்திடம்  ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தனர். 

அதன்பின்னர்  போராட்டத்தை கைவிட்ட தொழிலாளர்கள், மீண்டும், இரவு போராட்டத்தில் இறங்கினர். பொருட்களை அடித்து உடைத்து  ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்