நாளை முதல் ஊரடங்கு தளர்வு: சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை

நாளை முதல் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வரும் நிலையில் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-05-03 08:20 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வருகிற 17-ந்தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பதோடு, கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்