தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இன்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.
செனையில் மட்டும் இன்று 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது. அரியலூரில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.