பெரம்பலூரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் 3 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-01 10:13 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் 3 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   லப்பை குடிக்காடு, அத்தியூர், மற்றும் துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  கிராம எல்லை பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டு, வெளி நபர்கள் செல்லாதவாறும், அங்கிருந்து வெளியே யாரும் செல்லாதவாறும் கண்காணிப்படுகின்றனர்.மேலும் கிராமம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  தொடர்ந்து சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மேலும் 14 நாட்களுக்கு வெளி நபர்கள் மேற்காணும் பகுதிகளுக்குள் செல்லவும், உள்ளூர் நபர்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்