ஒடிசா முதல்-மந்திரியுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஒடிசா முதல்-மந்திரியுடன் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-04-30 22:30 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்