சென்னை-மும்பை இடையே சிறப்பு ‘பார்சல்’ ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-மும்பை இடையே சிறப்பு பார்சல் ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-04-13 20:03 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் கீழ்க்கண்ட பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி. (வண்டி எண்: 00116) இடையே சிறப்பு ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரை, காலை 10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து ரேணிகுண்டா, வாடி, சோலாபூர், புனே, கல்யாண் வழியாக மும்பைக்கு இயக்கப்படும்.

* மறுமார்க்கமாக மும்பை சி.எஸ்.டி.-சென்னை சென்டிரல் (00115) இடையே சிறப்பு ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரை, இரவு 7.35 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும்.

* இதேபோல், சென்னை எழும்பூர்-நாகர்கோவில்(வண்டி எண்: 00657) இடையே அதிகாலை 5 மணி, நாகர்கோவில்- எழும்பூர்(00658) இடையே காலை 8 மணி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை(00653) இடையே காலை 8 மணி, கோவை-சென்னை சென்டிரல் (00654) இடையே காலை 6 மணி(நேரம் மாற்றப்பட்டுள்ளது), திருவனந்தபுரம்-கோழிக்கோடு(00655) இடையே காலை 8 மணி, கோழிக்கோடு-திருவனந்தபுரம்(006565) இடையே காலை 8 மணி, சென்னை சென்டிரல்-டெல்லி (00646) இடையே மாலை 6 மணி, டெல்லி- சென்னை சென்டிரல் (00647) இடையே மாலை 6 மணிக்கு என சிறப்பு ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 14-ந்தேதி (இன்று) வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு ‘பார்சல்’ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை வருகிற 25-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்