தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-13 10:40 GMT
சென்னை, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை.

 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உள்ளது. 

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் செய்திகள்