தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-04-11 13:47 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மாநிலத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சென்னையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 182 ஆக உள்ளது.  

கோயம்புத்தூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை மொத்தமாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 

மேலும் செய்திகள்