கொரோனா பாதிப்பு; வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.;

Update: 2020-04-10 06:41 GMT
சென்னை,

தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்து உள்ளது.  இவர்களில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  8 பேர் பலியாகி உள்ளனர்.  6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்ந்து உள்ளது.  இந்த நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அதில், வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.  தனிமைப்படுத்தப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும்.  வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்