விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர் கவன குறைவால் விடுவிப்பு

விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர் கவன குறைவால் அரசு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-04-08 14:06 GMT
விழுப்புரம்,

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பாதிப்பு அறிகுறி தென்பட்ட நிலையில், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு பாதிப்பு இல்லை என கூறி நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து அவரை விடுவித்து விட்டனர்.  ஆனால் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்